அரசியல்வாதிகள் குழுவொன்று தூரப் பகுதி ஒன்றுக்கு பஸ் வண்டியொன்றில் பிரயாணம் செய்துகொண்டிருந்தது. கிராமப் புறமொன்றினூடகச் செல்லும் போது வண்டி மரமொன்றில் மோதி ஒரு வயலினுள் போய் விழுந்தது. அதிலிருந்த அரசியல்வாதிகள் எவரும் எழுந்திருக்கவில்லை.
அவ்வயலில் வேலை செய்துகொண்டிருந்த கிராமத்து விவசாயி இந்த விபத்தைக் கண்டான். அவன் பெரிய குழியொன்றைத் தோண்டி அந்த அரசியல்வாதிகளையெல்லாம் புதைத்து விட்டான்.
மறுநாள் அவ்வழியாக வந்த போலிஸ் அதிகாரியொருவர் பஸ் வண்டியைக்கண்டு என்ன நடந்தது என்று விவசாயியிடம் விசாரித்தார். நடந்ததை அவன் விவரித்தான். “எல்லோரையும் புதைத்து விட்டீரா? அவர்களில் ஒருவராவது உயிரோடிருக்கவில்லையா?” என்று ஆச்சரியத்தோடு கேட்டார் அதிகாரி.
“தாம் சாகவில்லை எனச் சிலர் சொன்னார்கள் தான். ஆனால் அரசியல்வாதிகளின் பேச்சை நம்ப முடியுமா வாயைத் திறந்தால் பொய்யைத்தானே பேசுவார்கள்!”. என்று விளக்கமளித்தான் விவசாயி.
No comments:
Post a Comment