ஒரு
கல்லூரியில் இருந்த நாணயம் போட்டுப் பேசும் தொலைபேசியை அங்குள்ள ஆசிரியர்களும் மாணவர்களும் பயன்படுத்தி வந்தனர். சில நாட்களாக அந்தத் தொலை பேசி பழுதாகி வேலை செய்யாமல் இருந்தது. இதைக் கண்ட மாணவனொருவன் அதனை உடனடியாக திருத்தித் தருமாறு வேறொரு தொலைபேசி மூலம் தொலைபேசிக் கம்பனியிடம் வேண்டிக்கொண்டான்.
அவன் முறைப்பாடு செய்த போதெல்லாம் “இதோ வருகிறோம்”, “நாளை வருகிறோம்” என்ற பதில்களே வந்தன. ஆனால் திருத்திய பாடில்லை.
சில
நாட்களுக்குப் பின் அந்த மாணவன் மீண்டும் தொலைபேசிக் கம்பனியிடம் தொடர்பு கொண்டு “இனி நீங்கள் வரத் தேவையில்லை.தொலைபேசி நன்றாக வேலை செய்கிறது . ஒரு சிறு பிரச்சினையைத் தவிர” என்று கூறினான்.
“அது என்ன பிரச்சினை?” எனக் கேட்டது கம்பனி. “பெரிதாக ஒன்றும் இல்லை. நாம் பேசி முடிந்த பின்னர் போட்ட நானயமெல்லாம் திரும்பி வந்து விடுகின்றன” என்றான் மாணவன்.
மறு நாளே தொலைபேசியை திருத்துவதற்கு ஆட்களை அனுப்பி வைத்தது கம்பனி.
மறு நாளே தொலைபேசியை திருத்துவதற்கு ஆட்களை அனுப்பி வைத்தது கம்பனி.
No comments:
Post a Comment