Monday, June 4, 2012

நம்ப முடியுமா?


அரசியல்வாதிகள் குழுவொன்று தூரப் பகுதி ஒன்றுக்கு பஸ் வண்டியொன்றில் பிரயாணம் செய்துகொண்டிருந்தது. கிராமப் புறமொன்றினூடகச் செல்லும் போது வண்டி மரமொன்றில் மோதி ஒரு வயலினுள் போய் விழுந்தது. அதிலிருந்த அரசியல்வாதிகள் எவரும் எழுந்திருக்கவில்லை.

அவ்வயலில் வேலை செய்துகொண்டிருந்த கிராமத்து விவசாயி இந்த விபத்தைக் கண்டான். அவன் பெரிய குழியொன்றைத்  தோண்டி அந்த அரசியல்வாதிகளையெல்லாம் புதைத்து விட்டான்.

மறுநாள் அவ்வழியாக வந்த போலிஸ் அதிகாரியொருவர் பஸ் வண்டியைக்கண்டு என்ன நடந்தது என்று விவசாயியிடம் விசாரித்தார். நடந்ததை அவன் விவரித்தான். “எல்லோரையும் புதைத்து விட்டீரா? அவர்களில் ஒருவராவது உயிரோடிருக்கவில்லையா?” என்று ஆச்சரியத்தோடு கேட்டார் அதிகாரி.

“தாம் சாகவில்லை எனச் சிலர் சொன்னார்கள் தான். ஆனால் அரசியல்வாதிகளின் பேச்சை நம்ப முடியுமா வாயைத் திறந்தால் பொய்யைத்தானே பேசுவார்கள்!”. என்று விளக்கமளித்தான் விவசாயி

பெரிதாக ஒன்றும் இல்லை


ஒரு கல்லூரியில் இருந்த நாணயம் போட்டுப் பேசும் தொலைபேசியை அங்குள்ள ஆசிரியர்களும் மாணவர்களும் பயன்படுத்தி வந்தனர். சில நாட்களாக அந்தத் தொலை பேசி பழுதாகி வேலை செய்யாமல் இருந்தது. இதைக் கண்ட மாணவனொருவன் அதனை உடனடியாக திருத்தித் தருமாறு வேறொரு தொலைபேசி மூலம் தொலைபேசிக் கம்பனியிடம் வேண்டிக்கொண்டான்.

அவன் முறைப்பாடு செய்த போதெல்லாம்இதோ வருகிறோம்”,  “நாளை வருகிறோம்” என்ற பதில்களே வந்தன. ஆனால்  திருத்திய பாடில்லை.

சில நாட்களுக்குப் பின் அந்த மாணவன் மீண்டும் தொலைபேசிக் கம்பனியிடம் தொடர்பு கொண்டுஇனி நீங்கள் வரத் தேவையில்லை.தொலைபேசி நன்றாக வேலை செய்கிறது . ஒரு சிறு பிரச்சினையைத் தவிர” என்று கூறினான்.

“அது என்ன பிரச்சினை?” எனக் கேட்டது கம்பனி. “பெரிதாக ஒன்றும் இல்லை. நாம் பேசி முடிந்த பின்னர் போட்ட நானயமெல்லாம் திரும்பி வந்து விடுகின்றன” என்றான் மாணவன்.
மறு நாளே தொலைபேசியை திருத்துவதற்கு ஆட்களை அனுப்பி வைத்தது கம்பனி.

Sunday, May 20, 2012

ஓ அதுவா!


தேர்தல் காலத்தில் இறந்து போன பிரபல அரசியல் வாதி ஒருவருக்கு தேவலோகத்தின் முக்கிய பகுதிகளைத் தேவர்கள் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தனர். அங்கு ஒரு கம்பத்தில் பெரிய மணி ஒன்று கட்டப்பட்டிருந்தது. இடையிடையே அந்த மணி தானாக அடித்துக் கொண்டது.

இதைக் கண்டு ஆச்சரியப்பட்ட நம் அரசியல்வாதி அந்த மணியைப் பற்றி விளக்கம் கேட்டார். “பூவுலகத்தில் எங்காவது பொய் பேசப்பட்டால் இந்த மணி தானாக ஒரு தடவை அடிக்கும்என்று விளக்கம் கொடுத்தார் வழிகாட்டியாக  வந்த தேவர்.

சற்று நேரத்தின் பின் அந்த மணி இடை விடாது தொடர்ந்து அடிக்கத் தொடங்கியது. “இது ஏன் இப்படி அடிக்கிறது?” என்று கேட்டார் நம் அரசியல்வாதி.

“ஓ அதுவா! இப்போது உங்கள் ரூபவாஹினியில் செய்தி வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று பதில் வந்தது தேவரிடமிருந்து.

இராணிக்குக் குழந்தை


பள்ளிக்குச் சென்றிருந்த குழந்தை,அம்மா!” என்று கத்திக்கொண்டு ஓடி வந்தது. “என்ன கண்ணே!” என்று அன்னை வாரி அணைத்தால்.

“எலிசபெத் ராணிக்குக் குழந்தை பிறக்கப் போகிறதாமே!”
 
“ஆமாம் கண்ணே!”
 
“எப்படியம்மா ராணிக்குத் தமக்கு குழந்தை பிறக்கப்போவது தெரியும்?”

“ராணிக்குத்தான் படிக்கத் தெரியுமே! இந்தச் செய்திதான் எல்லாப் பத்திரிகைகளிலும் வந்திருக்கிறதே” என்று தாய் சொன்னால். குழந்தை சிரித்தது தன் கேள்விக்குப் பதில் கிடைத்து விட்டதென்று.

Sunday, May 13, 2012

நானும் அப்படித்தான்


மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் தனது மாணவர்கள் குழுவொன்றுடன் செயல்முறைப் பாடம் நடத்துவதற்காக வைத்தியசாலைக்குச் சென்றார். அங்குள்ள நோயாளிகள் சிலரின் நோய் விபரங்களை மாணவர்களுக்கு விளக்கி அவர்களது வைத்திய அறிவைச் சோதிப்பதே அவரது நோக்கமாக இருந்த்தது.

ஒரு நோயாளியின் கட்டிலுக்கு அருகே சென்ற அவர் அங்கிருந்த x-ray படத்தை சுட்டிக்காட்டிஇங்கே பாருங்கள், இவனது இடது காலின் எலும்புகள் இரண்டும் முறுக்குண்டு போயுள்ளன. இதனால் தான் இவன் நொண்டியவாறு நடக்கிறான்” என்று விளக்கினார்.

பின்னர் ஒரு மாணவனைப் பார்த்துஇவ்வாறான நிலையில் நீர் என்ன செய்வீர்?” என்று கேட்டார்.

சிறுது நேரம் யோசித்த அம்மாணவன்சேர் நானும் நொண்டியவாறு தான் நடப்பேன் என்றான்