தேர்தல் காலத்தில் இறந்து போன பிரபல அரசியல் வாதி ஒருவருக்கு தேவலோகத்தின் முக்கிய பகுதிகளைத் தேவர்கள் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தனர். அங்கு ஒரு கம்பத்தில் பெரிய மணி ஒன்று கட்டப்பட்டிருந்தது. இடையிடையே அந்த மணி தானாக அடித்துக் கொண்டது.
இதைக் கண்டு ஆச்சரியப்பட்ட நம் அரசியல்வாதி அந்த மணியைப் பற்றி விளக்கம் கேட்டார். “பூவுலகத்தில் எங்காவது பொய் பேசப்பட்டால் இந்த மணி தானாக ஒரு தடவை அடிக்கும்” என்று விளக்கம் கொடுத்தார் வழிகாட்டியாக வந்த தேவர்.
சற்று நேரத்தின் பின் அந்த மணி இடை விடாது தொடர்ந்து அடிக்கத் தொடங்கியது. “இது ஏன் இப்படி அடிக்கிறது?” என்று கேட்டார் நம் அரசியல்வாதி.
“ஓ அதுவா! இப்போது உங்கள் ரூபவாஹினியில் செய்தி வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று பதில் வந்தது தேவரிடமிருந்து.
No comments:
Post a Comment