அதிகமான சொத்து செல்வங்கள் கிடைத்தால் அது இறைவன் நம்மைப் பொருந்திக்கொண்டான் என்பது அடையலாம் அல்ல. அவன் தன அடியார்கள் மீது கோபப்பட்டு இவ்வாறு அதிக செல்வங்களை கொடுத்து அதையே சோதனையாக மாற்றி வேதனை செய்வான். இறைவன் அவனது செல்வத்தை மனிதனுக்கு கொடுப்பதுக்கு கஞ்சத்தனம் காட்டமாட்டான்.
ஒரு உதாரணம்:
நாம் ஒரு எலியை எடுத்துக்கொள்வோம். அது வீட்டில் சுற்றித்திரிந்து பொருட்களை நாசப்படுத்துகிறது, பொருட்களை இடம் மாற்றம் செய்கிறது. இதைக் கண்ணுற்ற மனிதன் ஒரு எலிபொறியை வைக்க நாடுகிறான். விதம் விதமான உணவுப்பதார்த்தங்களை எலிபொறியுடன் சேர்த்து வைக்கிறான். மனிதன் எலியின் மீது கொண்ட அன்பினால் விதம் விதமான உணவுப்பதார்த்தங்களை வைக்க வில்லை. மாறாக எலியின் அட்டகாசம் பொறுக்க முடியாமல், அது செத்து மடிய வேண்டும் என்பதே மனிதனின் குறிக்கோள்.
தான் வளர்க்கும் கிளிக்கும் இவ்வாறு விதம் விதமான உணவுகளை வைக்கிறான். கிளிக்கு உணவு வைப்பதில் திருப்தி அடைகிறான் அனால் எலிக்கு உணவு வைப்பதில் திருப்தி அடைய்யவில்லை.
கிளிக்கு வைக்கப்பட்ட உணவு பிரியத்துடனும் சந்தோசத்துடனும் வைக்கப்பட்டது. ஆனால் எலிக்கு வைக்கப்பட்ட உணவு கோபத்துடன் தண்டிக்கும் நோக்குடன் வைக்கப்பட்டது.
இதைப்போன்று மார்க்கப்பற்றுள்ள மனிதனுக்கு இறைவன் சொத்து செல்வங்களை வழங்கினால் அது கிளிக்கு அன்புடன் உணவு கொடுத்ததைப் போன்று அருளாக மாறுகிறது. ஆனால் மார்க்கத்துக்கு முரணாக வாழ்பவனுக்கு இறைவன் சொத்து செல்வங்களை வழங்கினால் அது எலிக்கு கோபப்பட்டு உணவு வைத்ததைப் போன்று வேதனையாக மாறுகிறது.
ஒருவன் இறைவனுக்கு மாறு செய்ய ஆரம்பித்தால் அவனுக்கு சொத்து செல்வங்கள் கிடைக்கும். சொத்து செல்வங்கள் கிடைக்கப்பெறும் வாயால் மூடப்பட மாட்டாது. அதை வைத்து மனிதன் பெருமை பாராட்ட ஆரம்பித்தால் இறைவனின் வேதனை ஆரம்பிக்கும்.
No comments:
Post a Comment